கண்ணீர் வராத புதிய ரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பசுமை நாயகன் www.thagavalthalam.com

        வெங்காயம் விலையைக் கேட்டாமல் மட்டுமே இனி கண்ணீர் வர வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், வெங்காயத்தை உரிக்கும்போது கண்ணீர் வராத புதிய ரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

      வெங்காயத்தில் இருந்து வெளியாகி கண் எரிச்சலை ஏற்படுத்தும் புரோட்டீன் உற்பத்தியாவதைக் குறைக்கும் வழியை ஏற்படுத்துவதில் அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டனைச் சேர்ந்த காலின் ஈடி மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த சிலர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

     வெங்காயத்தில் கண்ணீரை வரவழைக்கும் புரோட்டீனைக் குறைத்து, அதற்கு பதிலாக சல்ஃபர் அளவை அதிகரிக்கும் வகையில் புதிய வெங்காய ரகத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த வெங்காயத்தை பயன்படுத்துவதால் இதய நோய் வருவது தடுக்கப்படுவதுடன் உடல் பருமன் ஆவதையும் தடுக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.