கால்நடைத்துறைக்கு ரூ25.88கோடி ஒதுக்கி முதல்வர்உத்தரவு

CM Press Release on Animal husbandry Date 03.10.13

thagaval

    கால்நடை பராமரிப்புத் துறையில் 25 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், புதிய திட்டங்களை அமல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
   இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளைப் பராமரிக்க, கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  அந்த வகையில், கிராமங்களில் உள்ள 100 கால்நடை கிளை நிலையங்களை தரம் உயர்த்த 6 கோடியே 93 லட்ச ரூபாயும், 250 மானிய விலை உலர் தீவன விற்பனை நிலையங்களை அமைக்க, 12 கோடியே 50 லட்ச ரூபாயும், உதகமண்டலத்தில் உள்ள உறை விந்து உற்பத்தி நிலையத்தை மேம்படுத்த 6 கோடியே 45 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.