இனியாவது விழித்துக்கொள்வோம் இயற்கைக்கு திரும்புவோம்



www.thagavalthalam.com பசுமை நாயகன்

நாம் நெல்லை உண்கிறோம்
மாடு புல்லை உண்கிறது

மாட்டின் சாணத்தை புழு, பூச்சிகள் உண்கிறது
அந்த புழு பூச்சிகளை வண்டு,குருவி,காகம் உண்கிறது

வண்டு,குருவி,காகத்தின் எச்சத்தை மண்ணில் பூஞ்ஞையும்,காளானும்,நூண்ணிர்களும் உண்கிறது

இந்த பூஞ்ஞையையும்,நூண்ணிர்களை மண்ணோடு சேர்த்து
மண்புழு உண்கிறது.

அந்த மண்புழுவின் எச்சத்தைதான்
செடிகள் வேர்வழியாக உண்கிறது
அந்த செடியிலிருந்து வரும் கத்தரி,தக்காலி,வெண்டை,தானியங்களை தான்
நாம் உண்கிறோம்

“மேல் மட்டத்தின் கழிவு கீழ்மட்டத்தின் உணவு”
நண்பர்களே இதற்கு பெயர்தான் உணவுசங்கிலி. இது பலமாக இருக்கும்வரைதான் மனித குலம் வாழும்.

இன்று பல்வேறு ரசாயனங்களை மண்ணில் கொட்டி திட்டமிட்டு இந்த உணவுசங்கிலி அறுக்கபடுகிறது.

மனிதர்களுக்கு மட்டும் அல்ல கோடானுகோடி உயிர்களுக்கும் இப்போது இருக்கும் ஒரே வீடு நம் பூமி மட்டும்தான்.

நாம் கண் இமைக்கும் நேரத்தில் இம்மண்ணில் ஒரு உயிரினம் அழிந்து கொண்டிருபதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.

தாய் மடியில் பால் குடிக்கலாம் அவள் மார்பை கிழித்து ரத்தம் குடிக்கலாமா?
இயற்கையும் நமக்கு தாய் போலதான்.
இனியாவது விழித்துக்கொள்வோம். இயற்கைக்கு திரும்புவோம்

நம் அடுத்த தலைமுறையை ஆரோக்கிய தலைமுறையாய். இயற்கையின் மடியில் பால் குடிக்கும் குழந்தைகளாய் மாற்றுவோம்.

நன்றி 
ம.அருள்ராஜ்
ஆர்கானிக் பசுமையக